முகப்புகோலிவுட்

அயலானில் இருந்து பிரபல நடிகை விலகல்..? - பளிச் பதில் சொன்ன ராகுல் ப்ரீத் சிங்..!!

  | June 28, 2020 10:32 IST
Rakul Preet Singh

துனுக்குகள்

 • 2018ம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவுப்பு வந்த நிலையில், தற்போது 2020ம்
 • இந்த படத்தில் பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதும் உறுதியான
 • அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்
கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது, மிஸ்டர். லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என்று மூன்று படங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்திற்க்கான அப்டேட் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் ஆர்.டி ராஜா அவர்கள் தயாரிக்க, ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவர்கார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. 'அயலான்' 'Destination Earth' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 'சயின்ஸ் பிக்ஷன்' படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த 2018ம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவுப்பு வந்த நிலையில், தற்போது 2020ம் ஆண்டு இந்த படம் தொடங்கவுள்ளது. படத்தின் கூடுதல் பாலமாக சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் ஆஸ்கார் நாயகன் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதும் உறுதியான நிலையில், தற்போது அவர் இத படத்தில் இருந்து விலகியுள்ளதாக சில செய்திகள் வெளியான நிலையில் அதை முற்றிலும் மறுத்துள்ளார் ராகுல். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com