முகப்புகோலிவுட்

பச்சைகளுக்குள் வெள்ளைப் பூவாய் நயன்தாரா! விக்கி ஃபேமிலியுடன் கோவா ட்ரிப்- வைரல் புகைப்படங்கள்..

  | September 14, 2020 22:14 IST
Vignesh Shivan

இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்து விக்னேஷ் “வெள்ளை எப்போதும் அற்புதம் தான்” எனப் பதிவிட்டுள்ளார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் தமிழ் திரையுலகில் தற்போது உள்ள லீடிங் கதாநாயகிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. ஆரம்ப நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் கதையில் ஒரு நாயகியாக மாறி அதன் பிறகு கதையின் நாயகியாக மாறியவர். பல மொழிகளில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். அண்மைக் காலமாக இவர் பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

b627rg98

நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர். இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதனை உறுதி செய்யும் விதமாக, வெளிநாடு, கோவில், சுற்றுளா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்வது மற்றும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

7gkvc3p

சமீபத்தில் ஓணம் பண்டிகையைக் கொண்டாட நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் கேரளாவில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர்கள் இருவரும் நயன்தாராவின் தாயுடன் சிறப்பாக ஓணம் கொண்டாடினர். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

9mhv7lpo

இப்போது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவரது அம்மாவுடன் கோவாவிற்கு ஒரு ஃபேமிலி ட்ரிப் சென்றுள்ளதாக தெரிகிறது. கோவாவில் பச்சைப் பசேலென இருக்கும் தோட்டத்தில் நயன்தாரா பூக்களைப் பரித்து விளையாடி மகிழும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன. இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்து விக்னேஷ் “வெள்ளை எப்போதும் அற்புதம் தான்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், விக்னேஷ் சிவன் தனது தாய் மகிழ்ச்சியாக காணப்படும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “உங்கள் தாயின் முகத்தில் உள்ள புன்னகை உங்கள் இதயத்தில் உள்ள மகிழ்ச்சிக்கு நேரடியாக இணையாகும். உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியை விட வேறு எதுவும் உங்களுக்கு அதிக திருப்தியையும் நிறைவையும் அளிக்காது, உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாகவும் உள்ளடக்கமாகவும் வைத்திருப்பதே வாழ்க்கையின் சிறந்த நோக்கமாக இருக்கவேண்டும்!” எனப் பதிவிட்டுள்ளார். அவரது புகைப்படமும் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com