முகப்புகோலிவுட்

கலைமாமணி விருது பெற்ற யுவன் சங்கர் ராஜா உட்பட 201 கலைஞர்கள்!

  | August 14, 2019 12:56 IST
Kalaimamani Awards

துனுக்குகள்

 • கடந்த 8 ஆண்டுகளுக்கான கலைமாணி விருது வழங்கும் விழா நடைபெற்றது
 • இதில் கானா உலகநாதன், வேல்முருகன் உள்ளிட்டோர் இவ்விருதினை பெறுகிறார்கள்
 • யுவன் சங்கர் ராஜா, கலைமாமணி விருதினை பெற்றார்
சென்னை கலைவானர் அரங்கில் நடந்த கலைமாமணி விருது விழாவில்.
திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள், இசை உட்பட  கலை சார்ந்து இயங்கக்கூடிய சிறந்தகலைஞர்களுக்கு இந்த விருது தமிழ்நாடு சார்பாக வழங்கப்படுகிறது.
 
கடந்த 1954ம் ஆண்டு முதல் இந்த விருதானது  சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 8 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படவில்லை. இதனை அடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து விருது வழங்கப்படுகிறது. 2011 முதல் 2018 ஆண்டுவரையிலான விருது சுமார் 201 கலைஞர்கள் இந்த விருதினை பெறுகிறார்கள்.

இதில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய்சேதுபதி, சந்தானம், பிரியாமணி, கார்த்தி, நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர், திரைப்பட இயக்குநர் கலைஞானம், நடிகர் சசிகுமார், தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, பிரபுதேவா, இயக்குநர் பவித்ரன், விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கானா பாலா, நடிகர் சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னணி பாலகி மாலதி, நடிகை நளினி, நடிகர் பிரசன்னா, நடிகர், இயக்குநர் பாண்டியராஜன், குட்டி பத்மினி, பாண்டு, சித்ரா லட்சுமணன், கானா உலகநாதன், டி.பி கஜேந்திரன், ஜுடோ ரத்தினம் உட்பட இன்னும் பல கலைஞர்கள் இந்த விருதினை பெறுகிறார்கள்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com