முகப்புகோலிவுட்

பிகில் படத்தில் விஜய்-யின் T-shirt இப்போது யாரிடம் இருக்கு தெரியுமா?

  | November 13, 2019 11:56 IST
Bigil Movie

துனுக்குகள்

  • பிகில் திரைப்படம் 300கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
  • இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தர்ராஜன் நடித்திருந்தார்
  • இப்படத்தில் விஜய் பயன்படுத்தி ஜெர்ச்சி தமிழகத்தில் வைரலானது
பிகில் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த சவுந்தர்ராஜாவிக்கு  விஜய் பயன்படுத்திய ‘பிகில்' T-shirt ஐ பரிசளித்துள்ளார்.
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியான படம் ‘பிகில்' இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ, குணசித்திர நடிகர் சவுந்தர்ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 
பாக்ஸ் ஆபிஸ் அளவில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த இப்படம் ரசிகர்களிடையே பெரு வரவேற்பை பெற்று இன்றும் வெற்றி நடைபோடுகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராகவும், பயிற்சியாளராகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் பயன்படுத்திய ‘பிகில்' T-shirt படுவைரலானது. தற்போது விஜய் பயன்படுத்திய அந்த ஜெர்சியை படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு விஜய் பரிசாக அளித்துள்ளார்.
 
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சவுந்தர்ராஜா. இவர் 'பிகில்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் 'பிகில்' படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு பரிசாக அளித்ததாக சவுந்தர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் "இந்த வருடத்தின் முக்கிய பரிசு இதுதான்" என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்