முகப்புகோலிவுட்

ஏன் அதை தடுக்கவில்லை..? - வனிதா திருமணம் குறித்து கேள்வி எழுப்பும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

  | June 29, 2020 07:51 IST
Vanitha Weds Peter

துனுக்குகள்

 • இதற்கிடையில், பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி
 • இந்த நிகழ்விற்கு நடிகை வனிதா விஜயகுமார் பதில் அளித்துவிட்டு நிலையில்
 • லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் அவர் ஏற்கனவே குறிப்பிட்டதை போல கடந்த 27ம் தேதி பீட்டர் பவுல் என்பவரை மணந்தார். இந்த லாக் டவுன் நேரத்தில் நேரத்தில் நடைபெற்ற திருமணம் என்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

இதற்கிடையில், பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனில், பீட்டர் பால் தன்னை விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்விற்கு நடிகை வனிதா விஜயகுமார் பதில் அளித்துவிட்டு நிலையில், பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "நான் இப்போதுதான் செய்திகளைப் பார்த்தேன்..!! அந்த மனிதன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றவர், விவாகரத்தும் செய்யவில்லை..! நன்கு படித்த ஒருவர் எப்படி இப்படி ஒரு தவறை செய்திருக்க முடியும்..? அதே போல ஏன் அந்த முதல் மனைவி இவர்களுடைய திருமணத்தை நிறுத்த முற்படவில்லை..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com