முகப்புகோலிவுட்

காமெடி நடிகர் சதீஷ் மீது கோபப்பட்ட ஹர்பஜன் சிங்..! வைரலாகும் வீடியோ..!

  | March 10, 2020 10:11 IST

‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் தயாரிப்பாளர் JSK சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து தற்போது, JPR மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் ‘Friendship' திரைப்படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார். மேலும், நகைச்சுவை நடிகர் சதீஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் அவர் ஹர்பஜன் சிங்கிடம், ‘எதிர்நீச்சல்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த காட்சியைக் காட்ட, அதைப் பார்த்த ‘பஜ்ஜி' உடனே கோவமடைந்ததைப் போல நடித்து சதீஷை பயமுறுத்தி, பின் சிரித்துவிடுகிறார். உடனே சதீஷும் அவருடன் சேர்ந்து சிரித்துள்ளார். இந்த ஃபன் நிறைந்த இந்த வீடியோ தற்போது செம வைரலாகிவருகிறது.

‘பிரண்ட்ஷிப்' திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் தயாரிப்பாளர் JSK சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து அக்னி தேவி மற்றும் சென்னையில் ஒரு நாள்-2 ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்
Listen to the latest songs, only on JioSaavn.com