முகப்புகோலிவுட்

ஏன் அவரை டார்கெட் பன்றாங்க..? - சல்மான் கானுக்காக வருத்தப்படும் சூப்பர் மாடல் மீரா..!!

  | June 27, 2020 09:06 IST
Sushanth Singh Suicide

துனுக்குகள்

 • 1 மாதத்தில் அனைத்து குற்றவாளிகளும் சிறையில் இருப்பார்கள்
 • சல்மான் கான் அவர்களை குறைக்கூறி வரும் நிலையில் அவருக்கு ஆதரவு
 • பல இளம் நடிகை நடிகர்களை அறிமுகம் செய்தவர் அவர்
மாடல் அழகியும் - நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். 

எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதில் “பயனற்ற அரசு.! தமிழ்நாடு அதன் பார்வை அழிவில். பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக அரசாங்கத்தை கலைக்கவும். ஒரு ஆணையை நிறைவேற்றி, என்னை முதல்வராக்குங்கள். ஒரு வாரத்தில் நான் முழு சூழ்நிலையையும் கட்டுக்குள் கொண்டு வருகிறேன், மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறேன், 1 மாதத்தில் அனைத்து குற்றவாளிகளும் சிறையில் இருப்பார்கள், 3 மாததில் ஊழல் ஒழியும், 6 மாதங்களின் இந்திய பொருளாதாரம் உயரும்” என்று அவர் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். 

இந்நிலையில் சுஷாந்தின் மரணத்தில் பலர் பிரபல நடிகர் சல்மான் கான் அவர்களை குறைக்கூறி வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மீரா. இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "சல்மான் மிகவும் நல்லவர், பல இளம் நடிகை நடிகர்களை அறிமுகம் செய்தவர் அவர். ஆனால் ஏன் அவரை குறைகூறுகிறார்கள் என்று புரியவில்லை. தற்போது அவர் மேல் பலர் புகார் கூறுவதை போல எனக்கும் நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்."
சுஷாந்த் மரணித்தபோது அவருடைய வழியை என்னால் உணரமுடிகிறது என்று மீரா ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com