முகப்புகோலிவுட்

'50 கோடி கொடுக்கலாமே..' - BCCI-க்கு வேண்டுகோள் விடுத்த பிரஷாந்த்

  | March 28, 2020 09:31 IST
Prashanth

துனுக்குகள்

 • இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்த், தனது ட்விட்டர் பக்கத்தின்
 • BCCI... நிச்சயம் உங்கள் வாங்கி கணக்கில் 1000 கோடி
 • உங்கள் நன்றியை தெரிவிக்கும் நேரம் இது
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா காரணமாக உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவை விட பல மடங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த நோய் குறித்த பயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த இக்கட்டான சூழலை தடுக்க இந்தியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த மாதம் 31ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுஒருபுரம் இருக்க, இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசுக்கு உதவு பல திரை பிரபலங்களும் களமிறங்கி உள்ளனர். நடிகர் கமல், பார்த்திபன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களை மருத்துவமனையாகத் தர தயார் என்று குறிப்பிட்டுள்ளனர். அதே போல பல நடிகர்கள் கோடிக்கணக்கில் நன்கொடையையும் இந்திய அரசுக்கு அவர்களின் சொந்த மாநில அரசுக்கும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்த், தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் BCCI-க்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த பதிவில் "BCCI... நிச்சயம் உங்கள் வாங்கி கணக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும், அதில் ஒரு 50 கோடி ரூபாயை இந்த கொரோனா நிவாரண நிதிக்காக கொடுக்கலாமே என்றும், கிரிக்கெட்டை நேசிக்கும் இந்த தேசத்திற்கு உங்கள் நன்றியை தெரிவிக்கும் நேரம் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளார்."

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com