முகப்புகோலிவுட்

Parody ஜானர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமா 'தமிழ்ப்படம்' பார்ட் 2?

  | June 05, 2018 13:36 IST
Mirchi Siva

துனுக்குகள்

 • தமிழின் முதல் ஸ்பூஃப் சினிமா `தமிழ்ப்படம்'
 • சி.எஸ்.அமுதன் இப்படத்தை இயக்கியிருந்தார்
 • பல சினிமாக்களை கேலி செய்து வெளிவந்து வரவேற்பைப் பெற்றது இப்படம்

8 வருடங்களுக்கு முன்னால் மிர்ச்சி சிவா நடிப்பில் 'தமிழ்ப்படம்' வெளியானபொழுது, கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் திரையங்கிற்கு படையெடுத்தனர். ரிலீஸான முதல் 3 நாட்களும், ஏதோ 'சூப்பர் ஸ்டார்' ரஜினி பட ரிலீஸ் போன்ற ஒரு பரபரப்பு காணப்பட்டது. சென்னை, கோவையை தாண்டி மற்ற நகரங்களிலும் அந்த வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம், பிரபலமான படங்களை கிண்டலடித்து எடுக்கப்படும் Parody Movies என்கிற ஜானர் ஹாலிவுட் சினிமாவில் இருந்த அளவிற்கு, தமிழ் சினிமாவிலோ இந்திய சினிமாவிலோ அதிகம் இருந்தது இல்லை. அது வரை, சத்யராஜ் - ஷக்தி சிதம்பரம் கூட்டணியில் சில படங்களிலும் வெங்கட் பிரபு போன்ற வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் ஆங்காங்கே சில படங்களின் parody இருந்தாலும், தமிழ் சினிமாவின் முழு நீள spoof திரைப்படமாக வந்த முதல் படம் 'தமிழ்ப்படம்' தான். 

ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் அதிகம் பிரபலமாகாத காலத்திலேயே, ரசிகர்களிடையே அப்படியொரு வரவேற்பும் ஒரு cult followingம் இருந்ததென்றால், இப்பொழுது 'தமிழ்ப்படம் - பார்ட் 2'விற்கான எதிர்பார்ப்பை பற்றி சொல்லவேண்டுமா என்ன? கடந்த 5 ஆண்டுகளில் sequelகளுக்கான மவுசு கூடிவிட்ட நிலையில், அறிவிப்பு வந்த நாளிலிருந்தே 'தமிழ்ப்படம்' இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. சமாதி முன் சிவா தியானம் செய்வதைப் போல வெளியான 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரே வைரல் ஆனது. இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசர் இந்த ஜானர் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

இந்த படத்தை ரசிகர்கள் இவ்வளவு எதிர்பார்க்க காரணம், கடந்த 8 ஆண்டுகளில் எத்தனையோ மொக்கை படங்கள் வெளியாகியிருக்கின்றன; அவற்றில் எவற்றையெல்லாம் கலாய்த்து இருக்கிறார்கள், எப்படியெல்லாம் கலாய்த்து இருப்பார்கள் என்கிற ஒரு ஆர்வம்தான். தோல்விப் படங்கள் மட்டுமின்றி, 'அந்நியன்' 'ரன்' 'அபூர்வ சகோதரர்கள்' 'பாட்ஷா' 'தளபதி' 'விருமாண்டி' 'சிவாஜி' வரை பல ஹிட் படங்களையும் அனாயாசமாக முதல் பாகத்தில் நக்கலடித்திருந்தது 'தமிழ்ப்படம்' டீம்.
சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதி முதல் ராமராஜன், ஒபாமா வரை கலாய்க்கும் சிவாவும் இயக்குனர் அமுதனும், இந்த டீசரில் தமிழக அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபொழுது அழுதுகொண்டே பதவியேற்றது முதல் விஜய் மல்லையா வரை கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள். 'தமிழ்ப்படம் - பார்ட் 2'வின் டீசரை பார்க்கையில், 'விவேகம்' பட கிளைமாக்ஸ் பாடல், 'ஆம்பள' படத்தில் சுமோ பறக்கும் காட்சி முதல் 'மெர்சல்' 'மங்காத்தா' 'விக்ரம் வேதா' துப்பறிவாளன்' '24' 'வேலையில்லா பட்டதாரி' 'துப்பாக்கி' ‘Hannibal Lecter’ வரை எந்த படத்தையும் விட்டுவைக்கவில்லை போல தெரிகிறது. முதல் பாகத்தில் சிவாவின் கல்லூரி நண்பர்களாக teenage இளைஞர்கள் நகுல், பரத், சித்தார்த் ஆக M.S.பாஸ்கர், 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, மனோபாலா நடித்ததைப் போல, இப்படத்தில் சந்தான பாரதி, R.சுந்தர்ராஜன், மனோபாலா நடித்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, 'தமிழ்ப்படம்' முதல் பாகத்தை காட்டிலும் இந்த இரண்டாம் பாகத்திற்கு 10 மடங்கு அதிக எதிர்பார்ப்பும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. படமும் அதே அளவு 10 மடங்கு அதிக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com