முகப்புகோலிவுட்

'பன்முக திறமைக்கொண்டவர்' - எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் 'வால்டர்'..!!

  | July 20, 2020 12:17 IST
Hbd S.j.surya

துனுக்குகள்

 • தமிழ் திரையுலகில் ஆறு திரைப்படங்கள் மட்டுமே இயக்கியபோதும் தனித்துவமான
 • 1997ம் ஆண்டு பிரபல நடிகர்கள் விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான
 • இந்த மேதை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்
தமிழ் திரையுலகில் ஆறு திரைப்படங்கள் மட்டுமே இயக்கியபோதும் தனித்துவமான இயக்குநராக, சிறந்த நடிகராக இன்றளவும் திகழ்பவர் தான் திரு. எஸ்.ஜே. சூர்யா அவர்கள். வாசுதேவநல்லூர் என்ற ஊரில் இருந்து சினிமா கனவுடன் சிங்கார சென்னை நோக்கி வந்த இவர் ஆரம்ப காலத்தில் பிரபல இயக்குநர் பாக்கியராஜ் அவர்களிடம் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு ஆசை, சுந்தர புருஷன் உள்ளிட்ட படங்களில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றினார். பாரதிராஜாவின் கிழக்கு சீமையில் படத்தில் சிறு வேடத்தில் இவர் நடித்திருப்பது நாம் அறிந்ததே. 

1997ம் ஆண்டு பிரபல நடிகர்கள் விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தில் பணியாற்றியபோது கிடைத்த தல-யின் நட்பை கொண்டு 1999ம் ஆண்டு அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் தான் வாலி. இந்த திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் சூப்பர்ஹிட் ஆகா அடுத்த ஆண்டே தளபதியை வைத்து குஷி என்ற தனது அடுத்த ஹிட் படத்தை கொடுத்தார். குஷி திரைப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இவர் உருவாக்கினார். 

அண்மைக்காலமாக விஜய், மகேஷ் பாபு போன்ற டாப் ஹீரோக்களுக்கு நிகரான வில்லனாக இவர் நடித்து அசத்தி வருவது நாம் அறிந்ததே. நடிப்பு, இயக்கம், எழுத்து, இசை என்று பல பரிமாணங்களை கண்ட இந்த மேதை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்தி தெரிவித்து வருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com