முகப்புகோலிவுட்

"கடவுளின் ஆசியோடு தொடங்குகிறேன்" - 'சினம்' பட அப்டேட் கொடுத்த அருண் விஜய்

  | August 03, 2020 17:25 IST
Sinam

துனுக்குகள்

  • மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து
  • இதற்கிடையில் என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கும் திரைப்பத்தில் நடிக்கத்
  • படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பிற்கு பிந்தைய
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தடம். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அருண் விஜய். இதனைத்தொடர்ந்து அப்போது அருண் விஜய், மாஃபியா, அக்னி சிறகுகள், பாக்ஸர், ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். 

இதற்கிடையில் என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கும் திரைப்பத்தில் நடிக்கத் தொடங்கினார். இப்படத்திற்கு 'சினம்' எனத் தலைப்பிடப்பட்ட நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு வெளியிட்டார். அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். அருண் விஜயின் தந்தை விஜயகுமார் தயாரிக்கும்  இப்படத்துக்கு ஷபீர் இசையமைக்கிறார். 

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் தொடங்க இருந்த நிலையில் கொரோனா இடர்ப்பட்டது. இந்நிலையில் சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பிறகு தற்போது Post Production பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 'சினம்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினர் அருண் விஜய்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com