முகப்புகோலிவுட்

'அவரின்றி நான் இல்லை' - தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் அட்லீ..!!

  | June 22, 2020 17:35 IST
Hbd Thalapathy

துனுக்குகள்

 • தொடக்க காலத்தில் பிரபல இயக்குநர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குநகராக
 • 2013ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவான
 • அவரை அதிகமாக நேசிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான்
தொடக்க காலத்தில் பிரபல இயக்குநர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின் பிரபல இயக்குநராக உருமாறியவர் தான் அட்லீ. 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் தான் இவர் சங்கர் உடனான தனது பயணத்தை தொடங்கினர். அதன் பிறகு தளபதி நடிப்பில் வெளியான நண்பன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

2013ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார் அட்லீ குமார். இதுவரை இவர் நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் மூன்று திரைப்படம் தளபதி விஜய்யுடன் ‘தெரி', ‘மெர்சல்' மற்றும் ‘பிகில்' ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார், மேலும் இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தில் கையெழுத்திட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தளபதி விஜய் தனது வாழ்த்துக்களை கூறியுள்ள அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "என்னோட அண்ணன், என்னோட தளபதி, என்னை நேசிப்பதை விட நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் எதுவும் இல்லை. Love you Na" என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com