முகப்புகோலிவுட்

'பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை' : சுஷாந்தின் இறுதிப் பயணம் - உடைந்துபோன கவின்..!!

  | July 07, 2020 10:38 IST
Dil Bechara

துனுக்குகள்

  • சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல
  • இந்நிலையில் அவருடைய நடிப்பில் கடைசியாக உருவான 'Dil Bechara'
  • தற்போது இந்த ட்ரைலரில் "நமது பிறப்பையும் இறப்பையும் நாம் முடிவு
இந்த ஆண்டு குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் பல திரைப்பிரபலன்கள் இந்த உலகை விட்டு மறைந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் சுஷாந்த் சிங் என்ற அந்த அருமையான நடிகரின் (தற்கொலை) மரணம் அவர் ரசிகர்கள் மட்டும் இன்றி பலரை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. பெயர் புகழ் என்று எல்லாம் இருந்தபோதும் அவர் தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்திற்கு பல காரணங்கள் கூறினாலும் மாண்டவர் திரும்புவதில்லை என்பதே நிதர்சனம். 

இந்நிலையில் அவருடைய நடிப்பில் கடைசியாக உருவான 'Dil Bechara' என்ற திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று இசைப்புயல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது. கேன்சர் பாதித்துள்ள ஒரு பெண்ணுக்காக அவளோடு இணைந்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். 

தற்போது இந்த ட்ரைலரில் "நமது பிறப்பையும் இறப்பையும் நாம் முடிவு செய்வதில்லை" என்ற ஒரு வசனத்தை அவர் பேசியுள்ளதை பகிர்ந்து மிகவும் வேதனையில் தான் இருப்பதை பகிர்ந்துள்ளார் பிரபல நடிகர் கவின் அவர்கள். "Shattered" என்று குறிப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com