முகப்புகோலிவுட்

"நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்" - கொதித்தெழுந்த ஹர்பஜன் சிங்..!!

  | July 03, 2020 12:57 IST
Justice For Jayapriya

துனுக்குகள்

 • தமிழகத்தில் கொடூர குற்றங்களும் தடையின்றி நடந்து வருகின்றது
 • இந்நிலையில் இந்த மிருகத்தனமான செயலுக்கு பல திரைப்பிரபலன்களும் தங்களுடைய
 • உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு
கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் அடங்காத நிலையில் தமிழகத்தில் கொடூர குற்றங்களும் தடையின்றி நடந்து வருகின்றது. இன்னும் சாத்தான்குளம் நிகழ்வே நம் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் தற்போது மற்றும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அனைவரின் நெஞ்சை பதறச் செய்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த மிருகத்தனமான செயலுக்கு பல திரைப்பிரபலன்களும் தங்களுடைய கடும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பாஜன் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க..! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா" என்று மனம் நெகிழ்ந்துள்ளார். 

சிறுமி என்றும் பாராமல் இந்த கொடூர நிகழ்வை அரங்கேற்றிய அந்த நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com