முகப்புகோலிவுட்

“உலகத்துக்கு இப்போது மகிழ்ச்சி தேவை” கியூட் வீடியோ வெளியிட்ட நடிகர் சந்தீப் கிஷன்.!

  | June 16, 2020 22:30 IST
Sundeep Kishan

சந்தீப் அடுத்ததாக, சிம்புதேவனின் ‘கசட தபற’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

டோலிவுட்டில் தனது திரைப்பயனத்தை துவங்கிய நடிகர் சந்தீப் கிஷன் ‘யாருடா மகேஷ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து, லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்' திரைப்படத்தில் நடித்து ஒரு நடிகராக கோலிவுட்டில் ரசிகர்களைப் பெற்றார்.

அதையடுத்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களில் நடித்த அவர், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நராகாசூரன்' பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரயுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்கல் இரங்கலையும், திரைத்துறையில் நடிகர்களுக்கு உள்ள அழுத்தங்கள், பிரச்சனைகள் குறித்து வெளிப்படுத்தினார்.

எதிர்மறையால் நிறைந்த இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சுந்தீப் கிஷன் ஒரு குழந்தையுடன் ஒரு அழகான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தாழ்மையான வேண்டுகோளை முன் வைத்துள்ளார். அவர் “கடந்த சில நாட்களாக அனைவருக்கும் கடினமாக இருந்தது.. சமூக ஊடகங்கள் எதிர்மறை மற்றும் சோகத்தால் நிரம்பியுள்ளன..  நாம் அனைவருக்கும் சில நேர்மறை தேவை.. இதை முயற்சி செய்வோம் & 24 மணிநேரத்திற்கு மகிழ்ச்சியானவற்றை மட்டும் பதிவிடுவோம்.. நமக்கு இது தேவை, உலகத்திற்கு இது தேவை .. நன்றி #HappyPostsOnly" என்று பதிவிட்டுள்ளார்.

சந்தீப் அடுத்ததாக, சிம்புதேவனின் ‘கசட தபற' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com