முகப்புகோலிவுட்

யாஷின் KGF-2 பட வெளியீட்டில் பெரும் மாற்றம்..?

  | August 04, 2020 14:05 IST
Kgf 2

முந்நதாக இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்ததாக மிக பிரம்மாண்டமாக தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ள படம் தான் ‘கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2'. இப்படத்தை பற்றிய சமீபத்திய செய்தி புதுப்பிப்பு என்னவென்றால், இப்படத்தின் வெளியீட்டை 2021 பொங்கலுக்கு தள்ள தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது இந்த தேதிமாற்றம் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தைப் பற்றிய செய்தி அறிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றன. மேலும், படப்பிடிப்பு பணிகளை முடிக்க, இன்னும் 15 நாட்களுக்கு சூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

பிரசாந்த் நீல் எழுதி இயக்கும் இப்படத்தில் யாஷுடன் ஶ்ரீஇநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கௌடா ஒளிப்பதிவு பணியை கவனித்துக்கொள்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com