முகப்புகோலிவுட்

லேடி வேடத்தில் யோகி பாபு; இறுதிகட்டத்தை நெருங்கிய “ஜாம்பி”

  | April 05, 2019 17:31 IST
Zombie

துனுக்குகள்

  • இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்
  • மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்
  • யோகி பாபு நடிப்பில் தர்மபிரபு, வாட்ச்மேன் ஆகிய படங்கள் முடிந்துள்ளன
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் `ஜாம்பி'.
 
இந்த படத்தை எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்க பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
 
இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஒரு பாடல் தவிர படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது இப்படம். பெரும்பகுதி படப்பிடிப்பு விடுதியை சுற்றியே நடந்துள்ளது. இந்த படத்தில் யோகிபாபு பெண் வேடத்திலும் சில காட்சிகளில் வருகிறார். அந்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு.
 
யோகி பாபு நடிப்பில் தர்மபிரபு, வாட்ச்மேன் உள்ளிட்ட படங்கள் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. மேலும் அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திலும் பிசியாக நடித்துவருகிறார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்