முகப்புகோலிவுட்

தனுஷ் ரசிகர்களுக்கு நாளை காலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

  | June 30, 2020 19:22 IST
Jagame Thandhiram

ஒய் நாட் ஸ்டூடியோஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் நாளை காலை 9 மணிக்கு ‘ஜெகமே தந்திரம்’ அப்டேட் கொடுக்கவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல்முறையாக தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்'. தனுஷின் இந்த 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம வைரலானது.

இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் பேனரில் எஸ். சசிகாந்த் தயாரித்துள்ளார். சக்கரவர்த்தி ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா கேமரா வேலைகளைக் கையாண்டிருக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் நாளை காலை 9 மணிக்கு ‘ஜெகமே தந்திரம்' அப்டேட் கொடுக்கவுள்ளது. தனுஷுக்கு வரும் ஜூலை 28-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் YNot Studios, அதன் பதிவில் “ஒரு அற்புதமான ஜூலை காத்திருக்கிறது. #DhanushBdayMonthBegins” என்று குறிப்பிட்டுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் தற்போது கொண்டாடிவருகின்றனர்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com