முகப்புகோலிவுட்

யோகி பாபு வீட்டில் விசேஷம்..! CM பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை நேரில் சென்று அழைப்பு.!

  | March 25, 2020 13:41 IST
Yogi Babu

வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ஒரு பிரமாண்டமான திருமண வரவேற்புக்காக திட்டமிட்டுள்ளார் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் நகைச்சுவை ஹீரோக்களில் ஒருவரான யோகி பாபு, தற்போது அஜித்துடன் 'வலிமை', சிவகார்த்திகேயனுடன் 'அயலான்', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவாசாய்', தனுஷுடன் 'கர்ணன்' மற்றும் 'ட்ரிப்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 2009-ஆம் ஆண்டில் ஒரே ஒரு படத்தில் நடித்த அவர், 2019-ஆம் ஆண்டில் 16 படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக உள்ளார்.

நடிகர் யோகி பாபு கடந்த பிப்ரவரி-5-ஆம் தேதி மஞ்சு பார்கவியை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய சில சொந்தங்களை மட்டும் அழைத்து தன் குலதெய்வ கோயிலில் எளிதாகத் திருமணம் செய்துகொண்ட அவர், வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ஒரு பிரமாண்டமான திருமண வரவேற்புக்காகத் திட்டமிட்டுள்ளார். அந்த விழாவிற்கு சினிமா பிரபலங்களையும் முக்கிய அரசியல் புள்ளிகளையும் அழைத்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவர்களது வீடுகளில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கினார் யோகி பாபு. கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த நிலையில், யோகி பாபு தனது வீட்டில் விசேஷம் வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சி எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நடைபெற வாழ்த்துக்கள்..!    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com