முகப்புகோலிவுட்

பாலிவுட்டிற்கு பறக்கும் நகைச்சுவை நாயகன் யோகி பாபு?

  | September 14, 2019 14:22 IST
Yogi Babu

பாலிவுட்டில் அமீர் கான் நடிக்கும் படம் ஒன்றில்  யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

துனுக்குகள்

 • அமீர் கான் நடிக்கும்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது
 • இந்த படத்தில் விஜய் சேதுபபதியும் நடிக்கவிருக்கிறார்
 • பன்னி குட்டி, மண்டேலா ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது
கடும் போட்டிகளிடையே தனது இயல்பான நடிப்பின் மூலம் சமகால தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் கலைஞனாக மாறியிருப்பவர் யோகி பாபு. இவர் இல்லாமல் படங்கள் வெளியாவது மிகக்குறைவு என்கிற அளவிற்கு தன்னுடைய தடத்தை தமிழ் சினிமாவில் பதித்திருக்கிறர். சிறு சிறு வேடங்களில் தோன்றி இன்று முன்னணி கதாநாயகர்கள் அனைவருடன் நடித்து தன்னுடைய இருப்பை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார் இவர். சம காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்க்கும் காமெடி நடிகராக இவரது வளர்ச்சி இருந்து வருகிறது. காமெடி நடிகராகவே கதாநாயகனாகவும் நடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.  

யோகி பாபு - விஜய் டி.வி ராமர் கூட்டணியில் இணைந்த அஞ்சலி!

  இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்கா போன்ற படங்கள் ஏற்கனவே ரிலீசான நிலையில், பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தமிழ் படங்களில் தடம் பதித்த யோகி பாபு தற்போது பாலிவுட்டிற்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
 
பாலிவுட்டில் அமீர் கான் நடிக்கும் படம் ஒன்றில்  யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.ஆஸ்கர் விருது வென்ற ஆங்கில படமான ‘பாரஸ்ட் கம்ப்' என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தான் யோகி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com