முகப்புகோலிவுட்

தயாரிப்பாளராகிறாரா யோகி பாபு?

  | September 20, 2019 18:51 IST
Yogi Babu

துனுக்குகள்

  • தர்பார் படத்தில் சடித்து வருகிறார் யோகி பாபு
  • பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் இவர்
  • மண்டேலா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு
தமிழ்சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்கள் வெளியாவது என்பது மிகக்குறைவு. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படம் என்றாலும் அதில் தேவையாக இருக்கிறார்.
 
சிறிய பட்ஜெட் அறிமுக நாயகர்கன் என்றாலும் மறுக்காமல் ரசிகர்களுக்கு காட்சிக்கொடுத்து சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. தற்போது இவர், விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பிகில்' ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார். விஜய்சேதுபதியின் ‘கடைசி விவசாயி', ‘ஹீரோ', பாண்டிராஜின் ‘நம்ம வீட்டு பிள்ளை' என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே 'சத்யம்' இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இந்த படத்தில் யோகி பாபு நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பதிலளித்துள்ள யோகி பாபு "நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்கணும் என்று ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்றே தெரியவில்லை" எனக் கூறியிருக்கிறாராம்.
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்