முகப்புகோலிவுட்

போட்டோ எடுப்பது யாருனு தெரியுதா..? - யோகி பாபு வெளியிட்ட throwback புகைப்படம்..!!

  | June 29, 2020 07:31 IST
Yogi Babu

துனுக்குகள்

 • தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் நகைச்சுவை ஹீரோக்களில்
 • சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர் தனது அயராத உழைப்பினால் இன்று
 • இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் நகைச்சுவை ஹீரோக்களில் ஒருவரான யோகி பாபு, தற்போது அஜித்துடன் 'வலிமை', சிவகார்த்திகேயனுடன் 'அயலான்', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவாசாய்', தனுஷுடன் 'கர்ணன்' மற்றும் 'ட்ரிப்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 2009ம் ஆண்டில் ஒரே ஒரு படத்தில் நடித்த அவர், 2019ம் ஆண்டில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக உள்ளார்.

சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர் தனது அயராத உழைப்பினால் இன்று மிகப்பெரிய நடிகராக உள்ளனர் என்பது பலருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கின்றது. தனது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத இவர் அவ்வப்போது சில பதிவுகளை பதிவேற்றுவது உண்டு. 

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பிரபலநடிகர் மொட்டை ராஜேந்திரன் அவர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை .வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்பதே highlight. அந்த புகைப்படம் வேதாளம் படத்தில் அவர் நடித்தபோது எடுத்த புகைப்படம். அப்போது தல அஜித் அவர்கள் இருவரையும் ஒன்றாக அமரவைத்து எடுத்த புகைப்படத்தை தான் அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com