முகப்புகோலிவுட்

ரஜினியுடன் இணையும் யோகி பாபு….

  | February 09, 2019 17:00 IST
Rajinikanth

துனுக்குகள்

  • ரஜினி இப்படத்தில் நடிக்கிறார்
  • இப்படத்திl யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வருகின்றன
  • இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்
‘பேட்ட' படத்தை தொடர்ந்து ரஜினி  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்தன. 
 
அதன் பின் ரஜினி இந்த படத்தில் நடிப்பதற்காக தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்கிற செய்திகள் வேகமாக பரவின. இதனை அடுத்து இந்த படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்யும் வேலை தீவிரமாக நடத்தி வருகிறது படக்குழு.
 
இதில் படம் முழுக்க ரஜினியுடனே வரும் முக்கிய காமெடி கதாபாத்திரத்துக்கு யோகி பாபுவிடம் படக்குழுவினர் பேசியுள்ளனர். யோகிபாபு தற்போது ‘தளபதி 63' படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ரஜினியுடன் முதன்முறையாக நடிக்க உள்ளார் யோகிபாபு. முன்னதாக ‘பேட்ட' படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் தான் பேசினார்கள். தேதிகள் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்