முகப்புகோலிவுட்

குடும்பத்தோட வாங்க குதூகலமா போங்க!! யோகி பாபுவின் கூர்கா டிரெய்லர்!!

  | July 06, 2019 15:26 IST
Yogi Babu

துனுக்குகள்

  • சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ராஜ் ஆர்யான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • கிருஷ்ணன் வசந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
தர்மபிரபு படத்தைத் தொடர்ந்து யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்க்கா'. சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாய் ஒன்று அண்டர்டேகர் என்கிற பெயரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
 

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது  ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை நேற்று பிரபல இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். இந்த வீடியோவில் பிரபல வணிக வளாகத்தை ஹைஜேக் செய்கிறது ஒரு கும்பல். துப்பாக்கி சூடு, சண்டை என விறுவிறுப்பான காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. வாட்ச் மேன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. டிரெய்லரே இப்படினா படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலும் இருக்கிறார்கள்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்