முகப்புகோலிவுட்

அண்டர்டேக்கரும் யோகி பாபுவும் ; “கூர்க்கா” ட்ரெய்லரை வெளியிட்ட தணுஷ்

  | April 27, 2019 13:17 IST
Gurkha

துனுக்குகள்

  • சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்
  • கனடா அழகிஎலிசா நாயகியாக இப்படத்தில் நடிக்கிறார்
  • தணுஷ் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்
4 மங்கீஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் டார்லிங் பிடத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி இருக்கும் படம் “கூர்க்கா”. யோகி பாபு கதாநாயகநாக நடிக்கும் இப்படத்தில் கனடா அழகிஎலிசா நாயகியாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பதிவில் கூர்கா படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ட்ரெய்லரில் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் நிறைந்திருக்கின்றன. இந்தப் படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.முன்னதாக படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில்
 
இந்த ட்ரெய்லரில் அண்டர்டேகர் என்கிற கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது.
 

விறுவிறுப்பாகவும் யோகிபாபுவின் அசத்தலான காமெடியாகவும் இந்த ட்ரெய்லர் உருவாகி இருக்கிறது. யோகி பாபு, ஏற்கனவே கதாநாயகனாக நடித்த “பட்டிபுலம்“ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தர்மபிரபு படத்தில் நடித்துமுடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்