முகப்புகோலிவுட்

வைரலாகும் யோகி பாபுவின் ‘பன்னி குட்டி’ ட்ரைலர்..!!

  | January 28, 2020 17:29 IST
Panni Kutty

துனுக்குகள்

  • இந்த படத்தை அணுசரன் முருகையா இயக்கி இருக்கிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
  • ‘K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘பன்னி குட்டி' திரைப்படத்தின் ட்ரைலரை நடிகர் மாதவன் நேற்று வெளியிட்டார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘கிருமி' திரைப்படத்தை இயக்கிய அணுசரன் முருகையா இயக்கியுள்ள திரைப்படம் ‘பன்னி குட்டி'. இந்தப் படத்தில் யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர், ‘பழைய ஜோக்' தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகத்துள்ளனர்.

இப்படத்துக்கு சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்ய அனுசரண் படத் தொகுப்பினை செய்துள்ளார். கலை இயக்கம் N.R. சுகுமாரன். ‘ஆண்டவன் கட்டளை', ‘49-0', ‘கிருமி' ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘கிருமி' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் அனுசரனுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் நேற்று வெளியானது. அதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு பன்னிக்குட்டியை வைத்து முழுக்கதையையும் காமெடியாகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்