முகப்புகோலிவுட்

யோகி பாபு நடிக்கும் “சோப்பு டப்பா” மிரட்டும் ட்ரெய்லர்

  | June 06, 2019 18:14 IST
Yogi Babu

துனுக்குகள்

  • இப்படத்தை முத்து வீரா இயக்கி இருக்கிறார்
  • ஹரி உத்ரா மற்றும் ஆர். உஷா இப்படத்தை தயாரித்துள்ளனர்
  • அனிஷ் சாலமன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
இயக்குநர் வி.முத்து வீரா இயக்கத்தில் யோகி பாபு, அக்ஷதா ஸ்ரீதர், சுசில் குமார் ஜெயின்,முத்து வீரா இன்னும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘சோப்பு டப்பா'. இப்படத்தை ஐ கிரியேஷன் சார்பாக ஹரி உத்ரா மற்றும் ஆர். உஷா தயாரித்துள்ளனர்.
 
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

 
இதில் ‘பணமும் அதிகாரமும்தான் நாம வாழுகிற வாழ்க்கையை தீர்மாணிக்கிறது” என்கிற வசனம் இடம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மிரட்டும் சண்டைகாட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அனிஷ் சாலமன் இசை அமைக்க வாசு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்