முகப்புகோலிவுட்

"நீங்கள் இந்த தேசத்தின் உண்மையான மகன்" - ட்விட்டரில் நெகிழ்ந்த மாதவன்

  | March 28, 2020 08:53 IST
Coronavirus

துனுக்குகள்

 • இந்நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக அவருடைய தாய் மரணமடைந்தார்
 • இருப்பினும் எனது நாட்டிற்காக நான் செய்யவேண்டிய பணி
 • உங்களால் அவர் நிச்சயம் பெருமைப்படுவார்
கொரோனவால் இந்தியாவில் 700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போபால் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கான துப்புரவுப் பொறுப்பாளரான திரு. அலி இந்த கடுமையான சூழ்நிலையில் பரவி வரும் தொற்று நோயை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக அவருடைய தாய் மரணமடைந்தார். இந்த செய்தி அறிந்த அவர் உடனடியாக வீட்டிற்கு சென்றிருந்தாலும் அவரை யாரும் குறைகூற முடியாத நிலையிலும் அவர் அவ்வாறு செய்யாமல் தான் மேற்கொண்டு வந்த பணியைத் தொடர்ந்துள்ளார். 

இதுகுறித்து அவர் NDTVயிடம் பேசியபோது, தனது தாய் இறந்த விஷயம் தனக்குக் காலை 8 மணிக்கே தெரியும் என்றும், இருப்பினும் எனது நாட்டிற்காக நான் செய்யவேண்டிய பணி நிறைய இருந்தது என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு பலரையும் மனமுருகச் செய்துள்ளது. தற்போது இந்த செய்தியை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் "அய்யா, உங்கள் தாயின் மரணம் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன், அந்த தாய் அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும் உங்களால் அவர் நிச்சயம் பெருமைப்படுவார். நீங்கள் இந்த தேசத்தின் உண்மையான மகன், உங்களுக்கு எங்களது நன்றியை வார்த்தையில் சொல்ல இயலாது" என்று கூறினார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com