முகப்புகோலிவுட்

"பெரிய எதிர்காலம் இருக்கு உங்களுக்கு" - சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துகளை பெற்ற தேசிங்கு..!

  | July 31, 2020 19:38 IST
Kkk

துனுக்குகள்

  • துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த
  • இந்த் படத்தின் இன்டெர்வல் காட்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால்
  • இந்நிலையில் சில மாதம் கழித்து அண்மையில் இந்த படத்தை பார்த்த
துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, நல்ல வசூலையும் ஈட்டிவந்தது. துல்கர் சல்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்தார். குறிப்பாக இந்த படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ள தேசிங்கு பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

இந்த் படத்தின் இன்டெர்வல் காட்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் இதுவரை யாரும் பார்த்திராத சில expressionகளை பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களிடமிருந்து வரவழைத்தது இயக்குநரின் வெற்றி என்று பலரும் பாராட்டினார். இயக்குநர் தேசிங்கு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை KKK படத்தின் முதல் காட்சிலேயே நிரூபித்திருப்பர். 

இந்நிலையில் சில கழித்து அண்மையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரு. தேசிங்கு பெரியசாமி அவர்களை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூப்பர்... excellent.. பெரிய future இருக்கு உங்களுக்கு என்று கூறிய சூப்பர் ஸ்டார், மேலும் தனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று அவரிடம் கூறியது தேசிங்கு அவர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுபோய்விட்டது என்றே கூறலாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com