முகப்புகோலிவுட்

'இதோ உங்களுக்காக OST..!!' - யுவன் வெளியிட்ட 'சூப்பர் டீலக்ஸின்' ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்..

  | May 29, 2020 16:16 IST
Ost

துனுக்குகள்

 • தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற
 • யுவன் இசையில் இந்த படத்தில் வந்த பின்னணி இசை ரசிகர்களிடையே
 • இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்து எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த
தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் தான் தியாகராஜன் குமாரராஜா. அவருடைய இயக்கத்தில் முதல் முறை திருநங்கையாக விஜய் சேதுபதி நடிக்க அவருடன் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், சமந்தா பகவதி பெருமாள் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வெளியான ஒரு படம் தான் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படம் கடந்த ஆண்டு வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. திருநங்கைகள் பலர் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
யுவன் இசையில் இந்த படத்தில் வந்த பின்னணி இசை ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக இந்த படத்தின் OST எனப்படும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த படத்தின் OST விரைவில் வெளியாகும் என்று யுவன் தனது ட்விட்டர் வாயிலாக கூறினார். 

இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்து எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த புதன்கிழமை என்று இந்த படத்தின் OSTயை தனது U1 records youtube சேனல் வழியாக வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தற்போது இந்த காணொளி வைரலாகி வருகின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com