முகப்புகோலிவுட்

"நீங்கள் கொரானாவைவிட கொடியவர்கள்" - விஜய் பட இயக்குநரின் காட்டமான ட்வீட்

  | June 16, 2020 18:51 IST
Treatment For Coronavirus

துனுக்குகள்

 • தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம்
 • அவர்களிடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள், கொள்ளையடிக்காதீர்கள்
 • புண்ணியத்தை சம்பாதிக்கிறீர்களோ இல்லையோ! பாவத்தை
அண்மைக்காலமாக கொரோனா தொற்றில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது தமிழகம். இந்நிலையில் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் விரைவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதேபோல, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அண்மையில் அறிவித்தது. 

தற்போது இது குறித்து பிரபல இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில் "மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டாம், அவர்களிடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள், கொள்ளையடிக்காதீர்கள்!. அப்படிக் கொள்ளையடித்தால் நீங்கள கொரானாவைவிட கொடியவர்கள்! சீனாக்காரனைவிட மோசமானவர்கள்!
புண்ணியத்தை சம்பாதிக்கிறீர்களோ இல்லையோ! பாவத்தை சம்பாதிக்காதீர்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com