முகப்புகோலிவுட்

“தண்ணீரை சேமிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்” நடிகர் வடிவேலு!

  | July 03, 2019 18:59 IST
Vadivelu

துனுக்குகள்

  • மெர்சல் படத்தில் வடிவேலு நடித்திருந்தார்
  • சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் இந்த திருவிழா நடந்தது
  • இதில் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்
தமிழ்நாட்டில் வரலாறு காணாதா தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பஞ்சத்தை போக்க பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூரில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. 5 புரவிகளை கிராம மக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
 
இவ்விழாவில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற அவர், வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்து பேசும் போது,
தண்ணீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை சேமிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.

இன்றைய சூழலில் உதவும் மனப்பாண்மை மனிதர்களிடையே குறைந்து வருகிறது. முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள். இன்று தனியாக இருந்தால் கொலை செய்து  விடுகின்றனர். சாலையில் மயங்கி கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்கள். தற்போது அவனது உடமைகள் பறிபோய் விடுகிறது என தற்போதைய சமூகச்சூழல் குறித்து வேதனையுடன் தெரிவித்தார்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்