முகப்புகோலிவுட்

ரஜினியுடன் இணைகிறாரா யுவன் சங்கர் ராஜா?

  | August 14, 2019 14:54 IST
Yuvan

துனுக்குகள்

  • கலைமாமணி விருது பெற்றிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா
  • ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் மெஹா ஹிட் கொடுத்தன. பேட்ட படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
 
அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஸ்வாசம் திரைப்படம் வெளியான போது படத்தைப்பார்த்த ரஜினி இயக்குநர் சிவாவை அழைத்து வாழ்த்து கூறியிருந்தார். இதனை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
 
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் இசையமைத்தால் ரஜினிகாந்த் - யுவன் சங்கர்ராஜா இணையும் முதல்படமாக இப்படம் அமையும். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்