முகப்புகோலிவுட்

மீண்டும் இணையும் இயக்குநர் சுசீந்திரன், யுவன் வெற்றிக் கூட்டணி

  | August 02, 2018 12:28 IST
Genius Movie

துனுக்குகள்

 • சுசீந்திரன் கைவசம் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்கள் உள்ளது
 • இப்படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்கின்றனர்
 • சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாம்
'நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் கைவசம் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்கள் உள்ளது. இதில் 'ஜீனியஸ்' படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்கின்றனர். இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால், அவர்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை, என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி கதை அமைத்துள்ளாராம் சுசீந்திரன்.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாம். தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, சுசீந்திரனின் ‘நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய 3 படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யுவனிடம் முழு படத்தையும் திரையிட்டு காண்பித்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார் சுசீந்திரன். ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீகாந்த் பாடிய ‘நீங்களும் ஊரும்’ என்ற பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ளாராம்.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com