முகப்புகோலிவுட்

யுவன் சங்கர் ராஜா அறிமுகப்படுத்தும் புதிய ஆல்பம்..!

  | December 14, 2019 15:47 IST
Yuvan Shankar Raja

துனுக்குகள்

 • இப்பாடல் திருநங்கை தாய்-வளர்ப்பு மகள் இடையிலான உறவை வெளிப்படுத்துகிறது.
 • இந்த ஆல்பம் பாடலுக்கு அபி ரெஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 • இப்பாடல் சிறந்த வீடியோ பாடல் விருதைப் பெற்றுள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் U1 Records “மறுபிறந்தாள்” (அவளது மறுபிறப்பு) எனும் புதிய இசை ஆல்பம் அறிமுகப்படுத்துகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P.ஜான் இசையில் ருக்‌ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான Dr.ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”. Dr.ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி,  தயாரித்துள்ளார். மேலும், ஆதர்ஷ் N.கிருஷ்ணாவுடன் இந்த இசை ஆலபத்தை இயக்கியுள்ளார் Dr.ஷஹானி ஹஃபீஸ். 
nboperj8


பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட், சமூக செயற்பாட்டாளர், மேடை நாடக கலைஞர், திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமார், ரோஸ் ஷெரீன் அன்சாரியுடன் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆல்பம் பாடல், திருநங்கை தாயுக்கும் அவரது வளர்ப்பு மகளுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஆணாதிக்கம் மாறாத இவ்வுலக சமுதாயத்தில் அனைத்து குற்றங்களுக்கும் குற்றவாளியாக பெண்ணையே கை காட்டுகிறது. பெண்ணின் ஒழுக்கம் காக்க சொல்லும் சமுதாயம்  அவளை அடக்குவதிலேயே தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மாற வேண்டியது சமுதாயமே. பெண்ணிற்கான உரிமையை அளிப்பதான சமூகமாக, நாம் அனைவரும் இணைந்தே இந்த சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் எனும்  கருத்தை தான் இந்த பாடல் சொல்கிறது.
g947bd6g

இந்த ஆல்பம் பாடலுக்கு அபி ரெஜி ஒளிப்பதிவை கையாள ப்ரேம்சாய் முகுந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பம் பாடலை உருவாக்கிய  Dr ஷஹானி ஹஃபீஸ் ஒரு ஆயூர்வேத நிபுணர். கேராளாவில் இயங்கி வ்ரும் ஆயூர்வேத மருந்துகள் தயாரிக்கும் Ayurveda Naturals நிறுவனத்தை நிறுவியவர். இது தவிர கேரளாவை தலைமையிடமாக கொண்டு வரும்  Ayurveda Media company-யின் நிறுவனராகவும் நிர்வாக பங்குதாரராகவும் உள்ளார். கவிதைகள், இலக்கியம், இசை மீது அதீத ஆர்வம் கொண்டு தன்னை அவ்வுலகில் இணைத்துகொண்டுள்ளார். தற்போது சமூக நல நோக்குடன் கூடிய கருத்தை மையமாக கொண்டு ஒரு குறும்படம் இயக்கி வருகிறார். 

மறுபிறந்தாள் (அவளது மறுபிறப்பு) உலகம் முழுதும் திரைவிழாக்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சிறந்த வீடியோ பாடல் விருதை International Thai Film Festival, Bangkok ல் பெற்றுள்ளது. இது இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மியூசிகல் வீடியோ என்பது குறிப்பிடதக்கது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com