முகப்புகோலிவுட்

வெளியானது யுவன் இசையமைத்துள்ள ‘ஜீனியஸ்’ பட பாடல்கள்

  | October 12, 2018 12:37 IST
Yuvan Shankar Raja

துனுக்குகள்

 • சுசீந்திரன் கைவசம் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்கள் உள்ளது
 • 'ஜீனியஸ்' படத்தில் ரோஷன் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார்
 • இதன் டீசர் & சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் கைவசம் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்கள் உள்ளது. இதில் 'ஜீனியஸ்' படத்தில் ரோஷன் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால், அவர்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை, என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி கதை அமைத்துள்ளாராம் சுசீந்திரன்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தியாகு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், அமுதேஷ்வர் வசனம் எழுதியுள்ளார். இதனை ‘சுதேசிவூட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் இந்த படத்தின் கதாநாயகன் ரோஷனே தயாரிக்கிறார்.

 

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர், சிங்கிள் டிராக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்