முகப்புmollywood

உடலுறுப்பு தானம் செய்த 500 மோகன்லால் ஃபேன்ஸ்.!

  | May 23, 2020 20:03 IST
Mohanlal

மோகன்லால் ‘மிருதசஞ்சீவினி’யின் பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு தசாப்தங்களாக திரைப்பட ஆர்வலர்களை மகிழ்வித்து வரும் இந்திய சினிமாவின் முழுமையான நடிகர் மோகன்லால், கடந்த வியாழக்கிழமை அன்று (மே-21) 60 வயதை எட்டினார். பூட்டுதலுக்கு மத்தியில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாளுக்கு, கோலிவுட் டோலிவுட் என எல்லா மூலைகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன.

தங்களுக்கு மிகவும் பிடித்த தென்னிந்திய ஐகானின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு பகுதியாக, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்ட மோகன்லால் ரசிகர்கள் சங்கத்தின் 500-க்கும் மேற்பட்ட மோகன்லால் ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை அரசு நடத்தும் 'மிருதசஞ்சீவினி' திட்டத்திற்கு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். மோகன்லால் ‘மிருதசஞ்சீவினி'யின் பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் இந்த உன்னத செயலுக்காக மோகன்லால் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பாராட்டு மழை கொட்டுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com