முகப்புmollywood

மலையாள திரையுலகில் என்ட்ரியான ‘96’ புகழ் கௌரி கிஷன்

  | December 03, 2018 18:30 IST
Gouri Kishan

துனுக்குகள்

 • கடந்த மாதம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான தமிழ் படம் ‘96’
 • இதில் இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷன் நடித்திருந்தார்
 • புதிய மலையாள படமொன்றில் நடிக்க கௌரி கிஷன் கமிட்டாகியுள்ளார்
கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘96'. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை கௌரி கிஷன் புதிய மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அனுக்ரஹீதன் ஆண்டனி' (Anugraheethan Antony) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சன்னி வெயின் நடிக்கவுள்ளாராம். பிரின்ஸ் ஜாய் என்பவர் இதனை இயக்கவுள்ளார். அருண் முரளீதரன் இசையமைக்கவுள்ள இதற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com