முகப்புmollywood

மலையாள சினிமாவிற்கு தாவும் நடிகர் கிருஷ்ணா

  | February 01, 2019 11:44 IST
Piccasso Film

துனுக்குகள்

  • இயக்குநர் சுனில் கரியாட்டுகரா இப்படத்தை இயக்குகிறார்
  • PICCASSO படத்தை ஷேக் அஃசல் இயக்குகிறார்
  • நடிகர் கிருஷ்ணாவின் முதல் மலையாளப்படம் இது
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மலையாள சினிமா மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.  ஆகவேதான் மலையாள திரையுலகு நடிகர்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
“இங்கு என்னை கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள், அவர்கள் கொடுக்கும் உற்சாகம்தான் என்னை இன்னும் நன்றாக இயக்குகிறது” என ஒரு முறை அறம் திரைப்படத்தில் நடித்த சுனு லக்ஷ்மி கூறியிருந்தார்.
 
அதே போல் திறமையான நடிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது மலையாள சினிமா. வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் சவாலாகவும் பிரமிப்பாகவும் இருப்பதால் அதன் மீது தனி கண்ணே வைத்துள்ளனர்.
 
வளர்ந்துவரும் கலைஞர்களையும் திறமையான நடிகர்களையும் இணைத்துக்கொள்ளும் மலையாள சினிமாவிற்கு அடுத்த வரவாக , தன் இளமை துள்ளும் நடிப்பால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் நடிகர் கிருஷ்ணா இணையவுள்ளார். மின்னல் வேகத்தில், தனது அடுத்த படமாக மலையாளத்தில் "PICCASSO"  என்ற படத்தின் மூலம் கேரளத்தில் கால் பதிக்கவுள்ளார். 
 
இதை உற்சாகத்துடன் பகிர்ந்த நடிகர் கிருஷ்ணா , மிகவும் உத்வேகத்துடன் இயக்குநர் சுனில் கரியாட்டுகரா உடன் இணைய உள்ளார். இவர் இதற்கு முன்பாக "பக்கிடா" மற்றும் "சக்கோ ரண்டமான்" போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். PICCASSO படத்தை ஷேக் அஃசல் இயக்குகிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்