முகப்புmollywood

இயக்குநர் அவதாரம் எடுக்கும் மோகன்லால்…!

  | April 24, 2019 11:43 IST
Barroz - Guardian Of D'gama'

துனுக்குகள்

 • இந்த ஆண்டு , பத்மஸ்ரீ விருது பெற்றார் இவர்
 • இவர்நடிப்பில் வெளியான லூசிபர் படம் நல்ல வரவேற்பை பெற்றது
 • தற்போது இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார் இவர்
மலையாளதிரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் மோகன் லால். ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால்,  இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர்.

அவரது நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த ‘லூசிபர்‘ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகராக தன் பயணத்தை தொடர்ந்துக்கொண்டிருப்பவர் தற்போது இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார்.
 
 மோகன்லால் இயக்கும் முதல் படத்துக்கு “ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா“ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக மோகன்லால் தனது இணையதள வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒரு நடிகராக பல்வேறு சாதனைகள் புரிந்த மோகன்லால், இயக்குநராக அடியெடுத்து வைத்ததன் மூலம் அதிலும் பல சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com