முகப்புmollywood

'எப்படிங்க இப்படி' - காதலர் தினத்தன்று தனது திறமையை வெளிப்படுத்தும் ரம்யா நம்பீசன்

  | February 12, 2020 10:16 IST
Remya Nambeesan

ஏற்கனவே நடிப்பு, நடனம், பாடல் என்றும் அசத்தும் ரம்யா நம்பீசன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்

துனுக்குகள்

  • காதலர் தினத்தன்று தனது திறமையை வெளிப்படுத்தும் ரம்யா நம்பீசன்
  • ரம்யா நம்பீசன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்
  • கெட்ட பையன் சார் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்து படு பிஸியாக உள்ளனர்
நடிப்பு, நடனம், பாடல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று பன்முக திறமை கொண்டு விளங்கும் நடிகை தான் ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான இவர், ஸ்ரீகாந்த் நடித்து 2006ம் ஆண்டு வெளியான ஒரு நாள் ஒரு கனவு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், என்று பல படங்களில் நடித்தாலும் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த பீட்சா படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது தமிழில் தமிழரசன், ரேஞ்சர், சிவா மற்றும் கெட்ட பையன் சார் இவன் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து படு பிஸியாக உள்ளனர்.

ஏற்கனவே நடிப்பு, நடனம், பாடல் என்றும் அசத்தும் ரம்யா நம்பீசன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ரம்யா தற்போது 'அன்ஹைட்' என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். காதலை மையப்படுத்தி இயக்கப்பட்ட கதை ஆதலால், இந்த படத்தை வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளார். 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்