முகப்புmollywood

'நன்றி மம்முக்கா' - மஞ்சு வாரியார் கனவை நனவாக்கிய மம்முட்டி

  | February 05, 2020 11:19 IST
Asuran

15 ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்தாலும் தனக்கு இன்றும் மார்க்கெட் குறையவில்லை என்று நிரூபித்தார் மஞ்சு வாரியர்

1995ம் ஆண்டு வெளிவந்த சக்ஷ்யம் என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். அடுத்து வந்த 4 ஆண்டுகளுக்குள் (1999ம் ஆண்டுக்குள்) சுமார் 20 படங்களில் நடித்து அசத்தினார். மலையாளத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைத்து நடித்த மஞ்சு, மிக விரைவில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். ஆனால் அவருக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. 

மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் முடித்த மஞ்சு, அதன் பின் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் விவாகரத்து ஆனா நிலையில், சுமார் 15 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் திரைத்துறையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். 2014ம் ஆண்டு வெளியான 'How old are you' (2015ம் ஆண்டு தமிழில் ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே) மோகன் லாலுடன் 'லூசிபர்', தனுஷுடன் 'அசுரன்' என்று தொடர்ச்சியாக படங்களில் நடித்து 15 ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்தாலும் தனக்கு இன்றும் மார்க்கெட் குறையவில்லை என்று நிரூபித்தார். 

இந்நிலையில், தற்போது மஞ்சு வாரியரின் 25 ஆண்டுகால கனவு மெய்யாகியுள்ளது, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் 'தி ப்ரீஸ்ட்' என்று தலைப்பிடப்பட்டுள்ள திகில் படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதனையடுத்து, மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனது கனவு நனவானது, நன்றி மாம்முக்கா' என்று குறிப்பிட்டு அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்