முகப்புmollywood

'உருவாகிறது த்ரிஷயம் பாகம் இரண்டு..!! - 'அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால்..'

  | May 21, 2020 18:44 IST
Drishayam

துனுக்குகள்

 • மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான
 • இயக்குநர் ஜீத்து ஜோசப் அவர்களுக்கு மிகப்பெரிய பெயரை
 • தற்போது அந்த தகவலை ஊறுதிப்படுத்தி வீடியோ ஒன்றை
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான த்ரிஷயம் என்ற படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ஆதி என்ற படத்தில் மோகன்லால் கௌரவ வேடத்தில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அபிஷேக் பிலிம்ஸ் அண்ட் passion ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்ற படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கினார் நடிகர் மோகன்லால். 

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான த்ரிஷயம் என்ற அந்த படம் இயக்குநர் ஜீத்து ஜோசப் அவர்களுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. சுமார் 750 மில்லியன் Box office என்ற அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க டைரக்டர் ஜீத்து ஜோசப் யோசித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது அந்த தகவலை உறுதிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மோகன்லால். ஏற்கனவே ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் தற்போது ராம் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com