முகப்புmollywood

குழந்தைகளுடன் தனது அரை நிர்வாண வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை.!!

  | June 26, 2020 17:27 IST
Controvercial Video

உச்ச நீதிமன்றம் பெண்களுக்குள் நுழைய அனுமதித்த பின்னர் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்றது என பல சர்ச்சைகளுக்கு அறியப்படுகிறார்.

ரெஹானா பாத்திமா தடைசெய்யப்பட்ட 'ஏகா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘ஏகா' திரைப்படம் இன்டர்செக்ஸ் பாலினத்தை கையாள்கிறது மற்றும் வன்முறை மற்றும் பாலியல் சித்தரிப்புகளைக் கொண்டுள்ளதால் தடைசெய்யப்பட்டது. 

சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்றதற்காக புகழ் பெற்ற ரெஹானா பாத்திமா, ‘உடல் மற்றும் அரசியல்' என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். அதில், ரெஹானா படுக்கையில் அரை நிர்வாணமாக படுத்திருக்க, அவரது உடலில் அவரது மைனர் மகனும் மகளும் ஓவியம் வரைவதைக் காணலாம்.அந்த வீடியோவை அவர் தனது பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார்.

tsjbm9no

இப்போது, ரெஹானா பாத்திமா மீது கேரளா திருவள்ள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ஏ.வி.அருண் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ள போலீசார் தெரிவித்ததுள்ளனர்.

அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜாமீன் அல்லாத குற்றங்களில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போஸ்கோ) சட்டம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பி.எஸ்.என்.எல் உடன் பணிபுரிந்த ரெஹானா பாத்திமா, மத உணர்வுகளை புண்படுத்தும் பதிவுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்களைப் பெற்றதால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், கல்லூரி பேராசிரியர்களின் கேவலமான அறிக்கையை எதிர்த்து தர்பூசணிகளைக் கொண்டு மேலாடையாக காட்டுவது, கிஸ் ஆஃப் லவ் இயக்கத்தில் பங்கேற்றது மற்றும் உச்ச நீதிமன்றம் பெண்களுக்குள் நுழைய அனுமதித்த பின்னர் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்றது என பல சர்ச்சைகளுக்கு அறியப்படுகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com