முகப்புmollywood

பிரபல இயக்குநர் மரணம்! திரையுலகம் அஞ்சலி!

  | January 17, 2019 16:38 IST
Lenin Rajendran

துனுக்குகள்

  • கேரள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் இவர்
  • இவர் இயக்கிய படங்கள் பல விருதுகளை பெற்றுள்ளன
  • 1996 -ம் ஆண்டு குழம் என்ற படத்திற்காகவும் விருது பெற்றுள்ளார்.

கேரளாவை சேர்ந்த இடதுசாரி சிந்தனையாளர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன். இவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பன்முகத் தன்மையோடு இயங்கியவர்.

இவர் 1982 ஆம் ஆண்டு இவர் “வேனல்” திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மழா,தெய்வத்தின் விக்ரிதிகள், மகரம் அன்னியர் உட்பட 14 படங்கள் இயக்கியுள்ளார்.

தெய்வத்தின் விக்ரிதிகள் திரைப்படத்திற்காக 1992 ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றார்.
1996 -ம் ஆண்டு குழம் என்ற படத்திற்காகவும் விருது பெற்றுள்ளார். இறுதியாக இவர் இயக்கத்தில் கடந்த 2016 - ம் ஆண்டு எடவப்பாதி என்ற திரைப்படம் வெளியானது. மனைவி ரமணி, மகள் பார்வதி மகன் கெளதமனுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த இவர் கடந்த நவம்பர் மாதம் நுரையீரல் கோளாறு காரணமாக சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். லெனின் ராஜேந்திரனின் இழப்பு கேரள திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்