முகப்புmollywood

நஸ்ரியா, ஃபஹத் ஃபாசில் அசத்தும் ‘ட்ரான்ஸ்’ ட்ரைலர்..!

  | January 31, 2020 16:45 IST
Trance

அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பிரபாகர் தொகுத்துள்ளார்.

ஃபஹத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் ‘ட்ரான்ஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் வைரலாகிவருகிறது.

நஸ்ரியா மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்த ‘Trance' எனும் மலையாள படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வைரலானது. அந்த படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. சாதாரனமாகவே, ஃபஹத்தின் நடிப்பைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. முழு ட்ரைலரிலும் கலக்குகிறார் ஃபஹத். ட்ரைலரில் கடைசியாக வந்தாலும், செம கூல் எண்டரி கொடுத்துள்ளார் நஸ்ரியா. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த ட்ரைலர் யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மலையாள திரைப்படமான டிரான்ஸ் திரைப்படத்தில் ஃபஹத் பாசில், நஸ்ரியா நாஜிம், கவுதம் வாசுதேவ் மேனன், சௌபின் ஷாஹிர், விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், திலீஷ் பொதான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பிரபாகர் தொகுத்துள்ளார்.  இப்படத்தை அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் பேனரில் அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு ஜாக்சன் விஜயன் இசையமைக்க, அவருடன் சேர்ந்து சுஷின் ஷியாம் பின்னணி இசையை அமைத்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்