முகப்புmollywood

நான்காவது முறையாக ‘கும்பளங்கி நைட்ஸ்’ டீமுடன் இணையும் பஹத் பாசில்.!

  | September 01, 2020 22:29 IST
Fahadh Faasil

பஹத் பாசில் விரைவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் மற்றொரு தமிழ் திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் உள்ளன.

எழுத்தாளர் சியாம் புஷ்கரன், இயக்குநர் திலீஷ் போதன் மற்றும் நடிகர் பஹத் பாசில் கூட்டணியில் இதுவரை 'மகேஷின்டே பிரதிகாரம்', 'தொண்டிமுதலம் டிரிக்ஷக்ஷியம்' மற்றும் 'கும்பளங்கி நைட்ஸ்' ஆகிய மூன்று படங்கள் வெளியானது. மூன்று படங்களுமே வெற்றிகரமானதாக மாறியது.

இப்போது இந்த சூப்பர் ஹிட் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திட்டத்திற்காக ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படம் முழுமையாக கேரளாவிற்குள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபஹத் பாசில், திலீஷ் போதன் மற்றும் சியாம் புஷ்கரன் ஆகியோர் இந்த அறிக்கைகளை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையில், ஃபஹத் பாசிலின் சோதனை திரைப்படமான சி.யூ. சூன் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த சோதனை திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், மற்றும் சைஜு குருப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பஹத் பாசில் விரைவில் ‘சூப்பர் டீலக்ஸ்' இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் மற்றொரு தமிழ் திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com