முகப்புmollywood

ஃபஹத் பாசிலின் ‘C U Soon’- விடுபட்ட காட்சிகளை புதிய படமாக்க திட்டம்..!

  | September 05, 2020 15:41 IST
C U Soon Film

C U Soon” என்ற திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியானது.

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களை கொடுத்துள்ள பிரபலமான இயக்குநர் பாசில். இவருடைய மகன் தான் பிரபல நடிகர் ஃபஹத் பாசில். பாசில் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான Kaiyethum Doorath என்ற படத்தின் மூலம் இவர் ஒரு நடிகராக திரையுகில் களமிறங்கினர். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார் என்றபோதும் இவருக்கு தமிழில் உள்ள ரசிகர்களின் பட்டாளம் ஏறலாம்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ட்ரான்ஸ் என்ற திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ஃபஹத் பாசில் நடிப்பில் “C U Soon” என்ற திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியானது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஃபஹத் பாசிலுடன், ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு சோதனை படமாக இருக்கலாம், ஆனால் படைப்பாற்றல் விஷயத்தில் வரம்புகள் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது. ஸ்கிரிப்ட் ஹீரோ என்பதை மலையாள திரையுலகம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இயக்குநர் மகேஷ் சமீபத்தில் பிரபல ஆல்லைன் போர்டலுக்கு அளித்த பேட்டியில் “நாங்கள் ஏற்கனவே இரண்டாவது பகுதியைத் திட்டமிட்டுள்ளோம், இது இரண்டாம் பாகம் அல்ல, ஆனால் ஒரு மெய்நிகர் அல்லாத படம் பற்றியது. இந்த படத்தில் (சி.யூ. சீன்) காணாமல் போன காட்சிகள் எதுவாக இருந்தாலும், அதை ஒரு தனி படமாக கொடுக்க திட்டமிட்டுள்ளோம். வழக்கமான வடிவத்தில் கொடுக்க விரும்பினாலும், இன்னும் அதற்கான திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இன்னும் எனக்கு தெளிவாகவில்லை. இது ஒரு சவாலான செயல்முறையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com