முகப்புmollywood

மோகன்லால் ஃபேனா நீங்க!! ‘பெய்லி’ யார்-னு தெரியுமா? தெரிஞ்சிகோங்க.!

  | May 21, 2020 18:41 IST
Mohan Lal

மோகன்லால் தற்போது மரைக்காயர் : அரபிக்கடலிண்டே சிம்மம்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால், தற்போது  சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தனது சமீபத்திய புகைப்படங்களில் தாடியுடன் காணப்படுகிறார். அவரது புதிய நண்பரை வெளிப்படுத்தி திரைத்துறை சகாக்களையும் தனது ரசிகர்களையும் திகைக்க வைத்துள்ளார்.

விலங்குகளை, குறிப்பாக செல்ல நாய்களை விரும்பும் நடிகர்களில் மோகன்லாலும் ஒருவர். அவர் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளை வளர்த்துவருகிறாராம். அவர், சமீபத்தில் தனது புதிய நண்பர் பெய்லியை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பெய்லி என்பது வேறு யாரும் இல்லை, ஒரு அழகான நாய்க்குட்டி. மோகன்லால் சிவப்பு சட்டை அணிந்து பெய்லியை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.

மோகன்லால் கடைசியாக 'பிக் பிரதர்' படத்தில் நடித்தார். அவர் அடுத்து பிரியதர்ஷன் இயக்க பிரம்மாண்ட திரைப்படமான மரைக்காயர் : அரபிக்கடலிண்டே சிம்மம்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com