முகப்புmollywood

இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் ‘மெகா ஸ்டார்’.!! வைரலாகும் ஒர்க்-அவுட் செல்ஃபி.!

  | August 17, 2020 14:38 IST
Mamooty

பணி முன்னிலையில், அஜய் வாசுதேவ் இயக்கிய ‘ஷைலாக்’ படத்தில் கடைசியாக நடித்த மம்மூட்டி, ’தி ப்ரீஸ்ட்’ மற்றும் ‘ஒன்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில ஒர்க்அவுட் செல்பிகளை பகிர்ந்து அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 68 வயதாகும் அவர் செம ஃபிட்டாகக் இருக்கிறார் மற்றும் அவரது சமீபத்திய கண்ணாடி செல்பி தற்போது உள்ள எந்தவொரு நடிகருக்கும் டஃப் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார். அவர் தனது மகன் துல்கர் சல்மானுக்கு கூட ஒரு கடினமான போட்டியாகவே இருக்கிறார் என்று சொல்லலாம்!

புகைப்படங்களைப் பகிர்ந்த மம்மூட்டி “Work at Home!, Work from Home!,Home Work! என்று எந்த வேலையும் இல்லை, அதனால் Work Out செய்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

மம்முட்டியின் பதிவுக்கு ஷராஃப், டோவினோ தாமஸ், அனு சித்தாரா மற்றும் நிவின் பாலி உள்ளிட்டோர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த பூட்டுதலுக்கு இடையில், மம்முட்டியும் ஒரு புதிய திறமையை ஆராய்ந்துள்ளார், சமீபத்தில் அதைப் பற்றி தனது ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். ஒரு தொழில்முறை கேமரா மூலம் வீட்டிலிருந்தபடியே புகைப்படங்களை எடுத்து ரசிக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார்.

பணி முன்னிலையில், அஜய் வாசுதேவ் இயக்கிய ‘ஷைலாக்' படத்தில் கடைசியாக நடித்த மம்மூட்டி, 'தி ப்ரீஸ்ட்' மற்றும் ‘ஒன்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com